தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146 பேர் காயம்!
Monday, September 19th, 2022தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிமீ (4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், ரயில்கள் குலுக்கும் காட்சிகள் சமூக சலைதளங்களில் வெளியாகி உள்ளன.
தாய்வானில் கடந்த 1999ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் வரை உயிரிழந்தனர். அதுவே அங்கு கடைசியாக ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக அறியப்படுகிறது. தாய்வான் பசிபிக் வளைய பகுதியில் அமைந்துள்ளதால் தாய்வானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
Related posts:
|
|