தாய்லாந்து பிரதமர் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சானோச்சாவை (Prayuth Chan-ocha) அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop), பேங்கொக்கில் சந்தித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜூலி பிஷப், நேற்று தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுட்வினையை (Don Pramudwinai) சந்தித்து விமான சேவைகள் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றிலுத் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விஜயத்தை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் அவர் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டே அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
300 பொலிஸாரை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள்!
அமெரிக்கா – வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை!
அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளது!
|
|