தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு அனுமதி!

Saturday, October 29th, 2016

எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்து, இம்மாத ஆரம்பத்தில் காலமான தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் பூதவுடவுக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்த முதல் முறையாக பொது மக்களை தாய்லந்து அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

காலமான மன்னரின் உடல், அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ள பாங்காக் அரண்மனையின் வெளியே இரவு முழுவதும் சாரை சாரையாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.மன்னரின் உடல் கிடத்தப்பட்டுள்ள அரியணை அரங்குக்குள் ஒரு நாளைக்கு 10,000 பேர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மன்னருக்கு இறப்புக்கு அதிகாரபூர்வ துக்கம் அனுசரிப்பது ஒரு வருடம் வரை நீடிக்கும்

_92143464_thai

Related posts: