தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்ட்!

Thursday, August 11th, 2016

தாய்லாந்திற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது.

தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்லாந்தின் ராணுவ அரசின் மற்ற துறைகள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த நடவடிக்கை வெறும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து தாய்லாந்தில் தங்கும் அனைத்து நபர்களுக்கும் பொருந்துமா என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: