தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார்? அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின!

Friday, July 1st, 2016

துருக்கியில் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் தான் நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் தரப்பில் எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் தற்கொலை குண்டுகளை தங்கள் ஆடையில் வைத்திருந்ததும், ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று பேரிடமும் ரஷ்ய நாட்டு கடவுச்சீட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து 12 மைல் தொலைவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 32 நாட்களுக்கு முன் முதல் மாடியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்களிடம் தங்களது கடவுச்சீட்டை காண்பித்ததுடன், ரஷ்ய மொழியில் பேசியுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த போது அண்டை வீட்டாருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாத தீவிரவாதிகள், அடிக்கடி தங்களுக்குள் சத்தம் போட்டு வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். காரில் ஏறி விமான நிலையம் வந்த தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதலில் வெளிநாட்டு பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்ட தீவிரவாதிகள் பின்னர் பொதுமக்களுடன் ஒன்றாக கலந்து தாங்களும் தப்பி ஓடுவதை போல நாடகமாடியுள்ளனர், அப்போது தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் மூவரும் கடந்த ஓராண்டுக்கு முன், ரக்கா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த பொலிசார், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றியதுடன், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

Related posts: