தாக்குதலை முறியடித்ததாக இந்தோனேஷியா அறிவிப்பு!

Saturday, August 6th, 2016

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் மற்றும் அயல்நாடான சிங்கப்பூர் மீது தாக்குதலை திட்டமிட்ட ஆறு பேரை பாதாம் தீவில் கைது செய்துள்ளதாக இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதாம் தீவிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிங்கப்பூரின் மரினா பேயை தாக்குவதற்கு, சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் உறுப்பினர் ஒருவருடன் சந்தேகநபர்கள் திட்டமிட்டதாக இந்தோனேஷிய பொலிஸ் பேச்சாளர் அகஸ் றியான்டோ நேற்று வெள்ளிக்கிழமை (05) தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமது உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்கள், சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்காக போரிடும் இந்தோனேஷியாரான பஹ்ருன் நைமுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக இந்தோனேஷியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில், நான்கு தாக்குதலாளிகள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்ட ஜகார்த்தாவில் இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவர் நைம் என இந்தோனேஷிய விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

 

Related posts: