தளத்தை ஜப்பானிடம் திரும்ப ஒப்படைக்கிறது அமெரிக்கா!
Saturday, July 30th, 2016காட்டில் பயிற்சி பெறுவதற்கு அமெரிக்கப் படைப்பிரிவுகள் பயன்படுத்துகின்ற ஒகினாவாவில் இருக்கும் நிலப்பகுதியின் ஒரு பகுதியை ஜப்பான் அரசிடம் திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தத் தீவில் அமெரிக்கப் படை தங்கியிருப்பதில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதன் மத்தியில் 4 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை அமெரிக்கா திரும்பி வழங்கவிருக்கிறது.இதன் மூலம் ஒகினவா தீவில் அமெரிக்கா நிர்வகித்து வருகின்ற நிலப்பரப்பில் 17 சதவீதம் குறையும்.
அமெரிக்க கடற்படையின் முன்னாள் படையினர் ஒருவர் உள்ளூர் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஒகினாவா தீவில் அமெரிக்க படைப்பிரிவுகள் தங்கியிருப்பது தொடர்பான நீண்டகால எதிர்ப்பு மீண்டும் உத்வேகம் பெற்றது.
Related posts:
சீன எல்லையில் இந்தியா படைகளை குவிக்கிறது! போர் மூளும் அபாயம்!
பாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்!
அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் ந...
|
|