தலைமை நீதிபதி பதவி நீக்கம்!

ஒரு பாலுறவுகாரர்களின் திருமணம் பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதால் அமெரிக்காவின் அலபாமா மாநிலம் அதனுடைய தலைமை நீதிபதியை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
ஒரே பாலின இணைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற உரிமையை ஏற்று கடந்த ஆண்டு வெளியான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்திற்கு பிறகும், ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளும் உரிமங்களை மறுத்து ராய் மோரே ஆணையிட்டுள்ளார்.
ஒழுங்கற்ற நடவடிக்கைகளை அரங்கேற்றும் ஓரின சேர்க்கை மற்றும் திருநங்கை குழுக்களால் அரசியில் ரீதியாக தூண்டப்பட்ட முயற்சிதான் தன்னுடைய பதவி நீக்கம் என்று இதனை அவர் விவரித்திருக்கிறார்.கடந்த மே மாதத்திலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் நீதிபதியாக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், போதனை செய்ய அல்ல என்பதை புரிந்து கொள்ள தவறிவிட்டதாக இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் உரிமை குழு ஒன்று கூறியிருக்கிறது.
Related posts:
|
|