தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
ஆனால் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் காபூலை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தலிபான்களுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
அதேசமயம், காபூலில் தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
Related posts:
உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன - பிரத...
இந்திய அணி படுதோல்வி – 6 ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை சுவிகரித்தது அவுஸ்திரேலியா அணி !
|
|