தற்கொலை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை – 7 பேர் உடல் சிதறி பலி!

Sunday, November 29th, 2020

சோமாலியாவில் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலர் உடல் சிதறி பலியாகினர்.

சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில் பிரபலமான ‘ஐஸ் கிரீம் பார்லர்’ உள்ளது. இங்கு நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

விமான நிலையத்துக்கு மிக அருகில் நடந்த இந்த குண்டு வெடிப்பால் விமான நிலையத்தில் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்த தற்கொலைப்படை தாக்குதலில் எத்தியோப்பியா நாட்டின் தூதரக ஊழியர் ஒருவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Related posts: