தற்கொலை குண்டுடன் வந்த மூன்று சிறுமிகள் நைஜீரியாவில் சுட்டுக்கொலை!

வடக்கு நைஜீரியாவில் நெரிசல் மிக்க சந்தையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த முயன்ற மூன்று சிறுமிகளை தற்காப்பு போராளிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். பொகோ ஹராம் ஆயுதக் குழுவே இந்த தாக்குதலை நடத்த முயன்றதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மடகாலி நகருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சிறுமிகள் அச்சுறுத்தும் வகையில் அணுகியதை அடுத்தே இராணுவத்துடன் இணைந்து செயற்படும் சிவில் போராளிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அந்த சிறுமிகள் சோதனைச்சாவடியை நோக்கி ஓடிவந்ததை அடுத்து போராளிகள் சிறுமியின் தலையில் சூடு நடத்தியதில் அவர் கட்டிவந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியும் கூட்டாளி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவது சிறுமி தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் கெளன்சில் தலைவர் யூசுப் முஹமது குலாக் குறிப்பிட்டார். பொகோ ஹராம் ஆயுதக் குழு 7 வயது கொண்ட சிறுமியர் உட்பட பெண்களையும் தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தி நடத்திய தாக்குதல்களில் கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
Related posts:
|
|