தற்காப்பிற்காக ஜப்பானில் பயிற்சி!

Monday, June 12th, 2017

வடகொரியாவினால் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு பாதுகாப்பினை பெறுவது என்பது குறித்து ஜப்பானில் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன

வடகொரியாவில் இந்து 665 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜப்பானின் சகாட்டா என்ற நகரில் இந்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன

ஏவுகணை தாக்குதல்களின் போது மக்கள் செல்லவேண்டிய இடங்கள் குறித்து ஒலிப்பெருக்கிகள் ஊடாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொங்கிரீட்டினாலான பாரிய பதுங்கு குழிகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிலப்பரப்பை சென்று தாக்கக்குடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்ளும் என அதன் ஜனாதிபதி கிங் ஜொங் யுங் ;அறிவித்துள்ளார்இந்தநிலையில் தற்காப்பிற்காக ஜப்பானில் இந்த பயிற்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.