தமிழக மீனவர் ரயில் மறியல்!

Tuesday, November 22nd, 2016
இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழகத்தின் புதுச்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு தமிழக – புதுவை அரசுகள் ரூ.10 இலட்சம் (இந்திய ரூபாய்) நிவாரண நிதி வழங்க வேண்டும். இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
43310567East

Related posts: