தமிழக மீனவர்கள் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு!

Wednesday, March 22nd, 2017

தமிழக மீனவ பிரதிநிதிகள் தில்லியில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணவும், உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுத்தரகோரி வலியுறுத்தினர்.

ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் அருளானந்தம், சேசுராஜ், தேவதாஸ், ஜஸ்டீன் உள்ளிட்ட 6 பேர் மற்றும் மீனவர் பிரிட்ஜோ, ஜெரோன் குடும்பத்தை சேர்ந்த 2பேர் மற்றும் கட்சியினர் இந்திய  அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது, சில ஆண்டுகளுக்கு முன் கேரள கடல் பரப்பில் குமரி மீனவர்கள் இருவரை சுட்டுகொன்ற இத்தாலி வீரர்கள் 2 பேரை கேரள போலீசார் கைதுசெய்ததுடன், சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்கியது.

இதுபோல் பிரிட்ஜோ குடும்பத்துக்கு இலங்கை அரசிடமிருந்து ரூ.1கோடி நஷ்டஈடாக பெற்றுத்தரவேண்டும். மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். இலங்கையில் உள்ள 138 விசைபடகுகளையும் மீட்டுத்தரவேண்டும்.

இன்று கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 10பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வரை தமிழக மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். விரைவில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என இந்திய அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தினர்.  பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் அளித்தனர்.

Related posts: