தமிழக சட்டசபை தேர்தல் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவீத வாக்குப்பதிவு

Monday, May 16th, 2016

தமிழக சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 50 சதவீத வாக்குகளும், கேரளாவில் 48.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மிக ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர், காலையிலேயே 527 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக வாக்கு சதவீதம்

அரியலூர் – 54.5

சிவகங்கை – 32

ஈரோடு – 48

சேலம் – 54.2

திருப்பூர் – 46.6

தர்மபுரி -52.15

திண்டுக்கல் – 44.72

காஞ்சிபுரம் – 34

மதுரை – 48.42

கோவை -4 2.5

திருவாரூர் – 42