தமிழக சட்டசபை தேர்தல் ஆரம்பம்!

Monday, May 16th, 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. 32 தொகுதிகளில் 2689 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 319 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள்.

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 65,731 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 5,417 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 1223 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டெறியப்பட்டுள்ளன.

1,07,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.வாக்குப்பதிவுக்காக மை உள்ளிட்ட 18 வகையான பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் 4,75,000 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 68 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பிற்பகலுக்குள் வெற்றி வாய்ப்புகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா போன்ற குற்றச்சாட்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு தொகுதிகளிலும் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவும், 25ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related posts: