தமிழகம் யாருக்கு ? தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!

கடந்த ஒரு மாதகாலமாக சட்டசபை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இதன் பின்னர் எந்த வகையிலும் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம்அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரம் தற்போது அடைந்துள்ளது.
66 ஆயிரம் வாக்குச்சாவடிகள், 4.3 லட்சம் ஊழியர்கள் என வாக்காளர்களுக்கு வசதியாக 66,001 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திகதி வெளியானவுடனேயே நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. அப்போது முதல் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சுமார் ரூ.38 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலின் போது மிகப்பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயாராக உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|