தமிழகம் புதுச்சேரியில் மே 16இல் தேர்தல்

Tuesday, March 8th, 2016
தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் திகதிகளை தலைமை தேர்தல் திணைக்களம் நேற்று (07) அறிவித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16இல் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும்; இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22இல் ஆரம்பமாகும். மே 19இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே, 22ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதேபோல மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைகளின் பதவிக் காலமும் மே மாதத்தில் முடிகின்றன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திகதியை தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி டில்லியில் நேற்று அறிவித்தார்.

Related posts: