தமிழகத்தில் ஒரேநாளில் 4800 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Sunday, July 19th, 2020

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 88 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் இரண்டாயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 84ஆயிரத்து 598 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக மூவாயிரத்து 588 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மூவாயிரத்து 49 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 48 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: