தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்துவைப்பு!

Thursday, January 28th, 2021

இந்திய தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், ‘அம்மா’ என அன்புடன் அதிமுக தொண்டர்களால் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி மறைந்தார்.
அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு தீர்மானித்தது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை போல் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது.
அண்மையில் இந்த பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பங்குபற்றி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி,’ தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: