தன்னாட்சி அதிகாரம்  இரத்து!

Saturday, October 21st, 2017

கட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்வதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது.குறித்த பிராந்தியத்தின் தலைவர் ஸ்பெயினில் இருந்து கட்டலோனியா பிரிந்து செல்வதற்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று எச்சரித்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரம் அற்றுப்போகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அரசாங்க அமைச்சர்கள் ஒன்று கூடி அந்த நாட்டின் அரசியல் யாப்பின் 155வது சரத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கட்டலோனியா தனித்து செல்வதற்கான அனுமதி கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பொதுமக்களால் வழங்கப்பட்டது.எனினும் பிராந்தியத்தின் தலைவர் தனிநாட்டுக்கான அறிவிப்பை வெளியிடாமல் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு அவகாசம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: