தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்பு!

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான அலி ஹஸன் வினை, ஜகாயா கிக்வேடே, அபைத் கருமே ஆகியோர் கலந்து கொண்டனர்.
தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மெகுபுலி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த அண்மையில் உயிரிழந்த நிலையில், துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த சமியா சுலுஹி ஹஸன் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான சமியா சுலுஹி ஹஸன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே - மருத்துவர்கள் விளக்கம்!
கன மழை – பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!
கொரோனா பற்றி அறிய செயலி - உலக சுகாதார அமைப்பு!
|
|