தனுஷை வழக்கை இரத்து செய்து தீர்ப்பு!

Saturday, April 22nd, 2017

பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள்தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றுவந்தது.மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தனர். அதில், தற்போது பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், 2002ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

பிரபல நடிகரான பிறகு கலைச்செல்வன் தன் பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும், தங்களை ஒதுக்கிவைத்துவிட்டதாகவும் தாங்கள் மிகவும் சிரமப்படுவதால், பராமரிப்புத் தொகையாக மாதம் அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

Related posts: