தனி ஆளாக ஒரு கிராமத்தில் வசிக்கும் அதிசய மனிதர்!

Sunday, November 20th, 2016

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் நபர் ஒருவர் தனியாக வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Xuenshanshe என்ற கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பொருளாதார பிரச்சனைகள் கருதி அந்த கிராமத்தை விட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

ஆனால், Lui Shengjia என்ற நபர் மட்டும் அந்த கிராமத்தை விட்டு செல்லாமல், அங்கேயே வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயது இருக்கும்போதே, இவரது அம்மா மற்றும் சகோதரன் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.

இதனால் சிறுவயதில் இருந்தே தனிமையில் வசித்து வந்துள்ளார். கிராம மக்கள் அனைவரும் விட்டுச்சென்றும் கூட அங்கிருந்து இவர் நகரவில்லை.

இதுகுறித்து இவர் கூறியதாவது, ஆரம்பத்தில் வீட்டில் தனியாக தூங்குவதற்கு பயமாக இருக்கும். இதனால் எனக்கு துணையாக நாயை வைத்துக்கொண்டேன்.

அதன் பின்னர் நாட்கள் செல்ல 5 ஆடுகளை வாங்கினேன். இதனால் இந்த விலங்கினங்களோடு எனது பொழுதினை கழித்து வருகிறேன். இவை என்னுடன் இருப்பதால் எனக்கு அச்சமாக இல்லை.

எனக்கு தேவையானவற்றை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கிவருவேன். அதுபோன்று இந்த விலங்கினங்களையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன் என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: