தனிநபர் உத்தரவில் நடத்தப்பட்டதாய்லாந்து தாக்குதல்!

Sunday, August 14th, 2016

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் கலவரங்களை, ஒரு தனிநபரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்ற ஒரு குழு ஒரே சமயத்தில் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்காக திட்டமிட்டவர்கள் யாரென்று தங்களுக்கு தெரியும் என அவர்கள் தெரிவித்த போதிலும், மேலும் அதுகுறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை.

சந்தேகத்திற்குரிய சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமையன்று பாங் ங்காவில், வெடிக்கத்தவறியதாக அதிகாரிகளால் நம்பப்படும் மேலும் இரண்டு கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் தாய்லாந்தின் புகழ்பெற்ற முக்கிய உல்லாச ஓய்விடங்களை குறிவைத்துள்ளது மேலும் தாய்லாந்து சுற்றுலா நிறுவனம் இந்த வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக புதிய ராணுவ அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts: