தடம்புரண்டது கனேடிய-பசுபிக் சரக்கு புகையிரதம்

Sunday, July 9th, 2017

தெற்கு அல்பேட்டாவில் கனேடிய-பசுபிக் சரக்கு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் புகையிரதத்தில் இருந்த தீங்கு விளைவுக்கும் பொருட்கள் சிதறடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு பெட்டிகளைக் கொண்ட குறித்த புகையிரதத்தில் உருகிய சல்பர் மற்றும் உரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் சிறியளவிலான தீ ஏற்பட்ட போதிலும் தீயணைப்பு வீரர்களால் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related posts: