தஜிகிஸ்தானில் கொடூரம் – நான்கு விளையாட்டு வீரர்கள் கார் ஏற்றி படுகொலை!

Tuesday, July 31st, 2018

அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர்.

தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அந்த பகுதி வழியாக வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த கோரமான தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்தில் தஜிகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts: