தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யா மிரட்டல்!

Friday, July 17th, 2020

கொரோனா தடுப்பு மருந்து தகவல் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் முன்னிலை வகிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு அறிவித்து இருந்தது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷ்யா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தலையீடு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி என இங்கிலாந்து தெரிவித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்து உள்ளது.

Related posts: