தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை – பிரித்தானிய காவற்துறை !

Saturday, May 27th, 2017

மென்செஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைத் தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை என்று பிரித்தானிய காவற்துறை தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவித்துள்ளன

குறித்த தாக்குதல் தொடர்பான ஆதாரங்களின் படங்கள், இரகசியமாக பாதுகாக்கப்பட்ட நிலையில், அவை அமெரிக்காவின் ஊடகங்களில் வெளியாக்கப்பட்டிருந்தன

இதனை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த கசிவு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அமெரிக்காவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: