தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயர் இரகசிய தகவல்களைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அந்நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
ஹரோல்ட் தோமஸ் மார்டின் என்ற அந்த நபர், ஆவணங்களை தான் எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்கள் பல்வேறு தேசிய பாதுகாப்புப் பிரச்சனைகள் தொடர்பானவை என்று நீதித்துறை வர்ணித்துள்ளது.
அதனால், முக்கியமான ஆதாரங்கள், முறைகள் மற்றும் அதன் திறன்களை கசியவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த நபர் எடுத்த ஆவணங்களில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற எதிரி நாட்டு கணினி பொறிமுறை அமைப்பில் ஊடுருவும் கணினி குறியீடுகளும் அடங்கும் என்று நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மார்டின் துரோகம் செய்ய நினைத்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|