ட்ரம்ப் அதிரடி: கணவன் மற்றும் மனைவி வேலை செய்யும் சலுகை நிறுத்தப்பட்டது!

அதெமரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தால் வெளிநாடுகளை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி வேலை செய்யும் சலுகை நிறுத்தப்படவுள்ளது. இதனால்பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இலங்கை இந்தியா உட்பட பிற உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இதில் 70 சதவிகிதம்இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்குஎச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளார். இதனால் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அங்கு வேலை பார்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த முடிவு நடைமுறைக்கு வரும் சமயத்தில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|