ட்ரம்ப்பை கைது செய்ய பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தது ஈரான்!

Friday, January 8th, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை ஈராக் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் உள்ள பாக்தாத் விசாரணை நீதிமன்றம், இராணுவத் தளபதி காசிம் சொலெய்மானி, அபு மஹ்தி அல் முகந்திஸ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையிலேயே இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஆண்டு ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சொலெய்மானியை ஆள் இல்லா விமானம் மூலம் அமெரிக்க இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கிலேயே நேற்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி காசிம் சொலெய்மானி மற்றும் அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சொலெய்மானி திட்டமிட்டதால் அவரைக் கொன்றோம் என ஒற்றை வார்த்தையில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்து.

இதையடுத்து, அமெரிக்க அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத்தால் தான் சொலெய்மானி கொல்லப்பட்டார் எனவும் அதற்குப் பழி தீர்ப்போம் என்றும் ஈரான் அப்போதே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் முகந்திஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர்களிடம் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில், காசிம் சொலெய்மானி, முகந்திஸ் இருவரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இராணுவம் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறவுள்ள ட்ரம்ப்பைக் கைது செய்ய பக்தாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ட்ரம்ப் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

00

Related posts: