ட்ரம்பின் மசோதா வாபஸ் பெறப்பட்டது!

Saturday, March 25th, 2017

அமெரிக்க பிரதிநிதி சபையில் தாக்கல் செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சுகாதார மசோதா போதுமான ஆதரவு இன்மையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சுகாதார மசோதா மீது நடக்கவிருந்த வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. முந்தைய அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

ஒபாமா கேர் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: