ட்ரக் வாகனத்தில் சென்ற 28 பேர் பலி..! குஜராத்தில் பரிதாபம்!

Wednesday, March 7th, 2018

இந்தியாவில் ட்ரக் வாகனமொன்று கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.  இந்தியா – குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்திலிருந்து 60 பேர் டிரக் வாகனமொன்றில் திருமணத்துக்குச் சென்றுள்ளனர்.   உம்ராலா என்னும் இடத்தில் பாவ்நகர் – ராஜ்கோட் வீதியில் பாலம்மீது ட்ரக் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்து கால்வாயில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: