டோரியன் சூறாவளி: இதுவரை 05 பேர் உயிரிழப்பு!

Thursday, September 5th, 2019

பஹாமாஸ் தீவுகளில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய டோரியன் புயலால் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்திருக்கும் என செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது. டோரியன் புயல் அட்லாண்டிக் கடலில் ஏற்படும் இரண்டாவது தீவிர புயலாகவும், பயங்கர புயலாகவும் இருக்கும் என பஹாமாஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பஹாமாஸ் வரலாற்றில் மிகக் கடுமையான புயலாக உருவெடுத்துள்ள டோரியன் புயல் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதிக்கு மிக அருகில் நகர உள்ளது என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க மாகாணங்களான ப்ளோரிடா, ஜார்ஜியா, வட மற்றும் தென் கரோலினா ஆகியவை அவசர நிலை பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: