டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

Monday, June 19th, 2017

ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியது

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் பக்ஹார் சமான் 114 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்பதிலளித்த இந்திய அணி 30.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதன்படி, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றிப்பெற்ற ஐ.சி.சி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இதேவேளை இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் வீட்டுக்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.இதனுடன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணியின் வீரர்களது உருவப் படங்கள் எரிக்கப்பட்டும், தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்பட்டும் உள்ளன