டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டு வைத்தார் பாரதப் பிரலதமர மோடி!

Tuesday, May 23rd, 2023

பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர், நேற்று பப்புவா நியூகினிக்கு சென்றடைந்தார்.

இதன்போதே, டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் இந்திய பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ளது.

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: