டொனால்ட் ட்ரம்பிற்குத் தெரியாத மகனின் ரஷ்ய உறவு!

Thursday, July 13th, 2017

கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்த விவகாரம் புதிய செய்தி ஒன்றை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. டொனால்ட் டர்ம்பிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதில்  ரஷ்ய சட்டத்தரணியொருவரின் தலையீடு வெளி வந்திருக்கிறது. குறித்த சட்டத்தரணி க்ரெம்ளினோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஹிலாரி கிளின்டனின் பிரசாரத்தை முறியடிக்கும் திட்டங்களையும் குறித்த சட்டத்தரணி கொண்டிருந்தார்.

ரஷ்ய சட்டத்தரணியான நட்டாலியாவை டொனால்ட் ட்ரம்பிற்குச் சொந்தமான ட்ரம் ரவரில் ட்ரம்பின் மகன்இ சந்தித்துள்ளார். குறித்த இந்தச் சந்திப்புக் குறித்து தனது தந்தையான ட்ரம்பிற்குத் தான் தெரிவிக்கவில்லை என ஃபொக்ஸ் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் நேற்றுத் தெரிவித்துள்ளார். அவருக்கும் ரஷ்யச் சட்டதரணிக்கும் இடையேயான மின்னஞ்சல்கள் வெளிவந்த நிலையில் இவ் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்இ முன்னணியில் இருந்த ஹிலாரி மீது ரஷ்யா சேற்றை வாரி இறைத்தது என்ற பகிரங்க குற்றச்சாட்டை மறைக்க தொடர்ந்தும் ட்ரம்பின் ஆதரவுப் பிரிவு முயற்சித்து வருகிறது. இக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என கிரெம்ளின் ஆரம்பம் முதலே மறுத்து வருவதும் குறிப்பிடத் தக்கது.

Related posts: