டொனால்ட் டிரம்ப்- பராக் ஒபாமா சந்திப்பு!

நடந்த முடிந்த கசப்பான அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பிறகு, அந்நாட்டின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் மூத்த அரசியல்வாதிகள் தேச நலனுக்காகக் தாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டி அழைப்பு விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்துக்கும், தனது நிர்வாகத்துக்கும் இடையே வெற்றிகரமான அதிகார மற்றும் அலுவல் பொறுப்புகள் மாற்றம் நடந்திட தன்னால் இயன்றதை உறுதி செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) மாலை வெள்ளை மாளிகையில், வரும் ஜனவரி மாதம் நடக்க வேண்டிய அதிகார பொறுப்புகள் மாற்றம் குறித்து விவாதிக்க, அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை, தற்போதைய அதிபர் பராக் ஒபாமா சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, தனது தேர்தல் தோல்வி மன வலியைத் தருவதாக இருந்தாலும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் டொனால்ட் டிரம்ப் ஒரு வெற்றிகரமான அதிபராக விளங்குவார் என்று தான் நம்புவதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் தெரிவித்தார்.
Related posts:
|
|