டொனால்ட் டிரம்பின் வெற்றியை புகழ்ந்த அல்-கொய்தா !

Thursday, November 10th, 2016

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்பை அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைக்கப்பட்ட ஜிகாதிகள் அமைப்பு ஒன்று வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தாக்கிய அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்துள்ள சிரியாவை சேர்ந்த Jabhat Fatah al-Sham என்ற ஜிகாதிகள் அமைப்பு தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் ‘ஜனநாயகம் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு டொனால்ட் டிரம்பின் வெற்றி ஒரு மரண அடி ஆகும். இன்று முதல் மேற்கத்திய நாடுகளில் என்ன நிகழ்கிறது என்பதை நாங்கள் ஊடகங்கள் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில், டொனால்ட் டிரம்பை டுவிட்டரில் பின்தொடர்ந்து சென்றாலே அனைத்து தகவல்களையும் சேகரித்துக்கொள்ளலாம்’ என அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.மேலும், எகிப்து நாட்டை சேர்ந்த முன்னணி ஜிகாதி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது எங்களுக்கு ஒரு மோசமான செய்தியாக இருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவில் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில், கூடிய விரைவில் அமெரிக்காவை டொனால்ட் ட்ரம்பே அழித்து விடுவார்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

_92376541_gettyimages-621867482

Related posts: