டிராமி புயல் – ஜப்பானில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 2nd, 2018

டிராமி’ புயல் தாக்கியதில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.

மணிக்கு 216 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதனை தொடர்ந்து கடும் மழை பெய்துள்ளது. மேலும் ஒசாகா மாகாணத்தின் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புயல் மற்றும் மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்துள்ளதுடன், மேலும் புல்லட் புகையிரத உட்பட அனைத்து புகையிரத சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

Related posts: