டிரம்ப்பின் பயணத்தடை மீதான தடையை விலக்க மேல் நீதிமன்றம் மறுப்பு!

Friday, February 10th, 2017

பெரும்பான்மையாக முஸ்லீம் மக்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத் தடையை மீண்டும் அமுல்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

டிரம்பின் நிர்வாக ஆணைக்கு தடை விதித்து கீழ் நீதிமன்றம் ஒன்று பிறப்பித்த தடையாணையை அகற்ற முடியாது என்று மேல்முறையீட்டுக்கான பொது அதிகார வரம்புடைய 9-வது அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை கடுமையாக சோதிக்க டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதையொட்டி, தேசிய பாதுகாப்பு ஆபத்திலுள்ளது, இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள போவதாக சினத்துடன் டிவிட்டர் பதிவிட்டு டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.

டிரம்ப் விதித்த தடையை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று எண்ணப்படும் தீவிரவாதத்தை, அரசு நிரூபிக்கவில்லை என்று இந்த நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்திருக்கின்றனர்.

17-1476683506-donaldtrump-11-600

Related posts: