டிரம்ப்பின் அறிவிப்பு: வெளிநாட்டு வீரர்களுக்கு பாதிப்பில்லை!
Wednesday, February 1st, 2017
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி (யுஎஸ்ஒசி) தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஈரான்இ இராக்இ ஏமன்இ சிரியாஇ சூடான்இ லிபியாஇ சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இந்நிலையில்இ அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்இ “சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று அமெரிக்க அரசு யுஎஸ்ஒசியிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன்இ அவ்வாறு விளையாட்டுப் போட்டிக்காக வருகை தருவோரை அமெரிக்காவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம் தேதி உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகக் கோப்பை போட்டிகளும் அங்கு நடைபெற உள்ளன.
இதனிடையேஇ ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க அமெரிக்க அணி தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|