டிரம்பை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்!

Saturday, January 11th, 2020

ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் டொனால்டு டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் 224-194 என்ற கணக்கில் நிறைவேறியுள்ள இந்த தீர்மானம், அடுத்ததாக டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை கொண்டுள்ள செனட் சபையில் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல் தவிர்த்த மற்ற சூழ்நிலைகளில், ஈரானுடன் சண்டையிடுவதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை டிரம்ப் நிர்வாகம் பெற வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

ஆனால், அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே தங்களது அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற இராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை மனிதர்களே இல்லாமல் வெறும் ட்ரோனை மட்டுமே பயன்படுத்தி கொன்றுள்ளது அமெரிக்கா.

தாங்கள் எந்த ட்ரோனை பயன்படுத்தி சுலேமானீயை கொன்றோம் என்பதை அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டு விமானப்படையில் இருக்கும் ட்ரோன்களிலேயே அதிதிறன் வாய்ந்த எம்.கியூ – 9 ரீப்பர் அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிதிறன் வாய்ந்த எம்.கியூ – 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

Related posts: