டிரம்பை கடுமையாக விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி !

Monday, October 16th, 2017

 

ஈரான் மீது டொனால்டு டிரம்ப் கடுமையான நிலைபாடு கொண்டிருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விமர்சித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தேசிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டுக்கு எதிராக எடுத்துவருவதாக குற்றம்சாட்டினார். ஆனால் டிரம்ப் ஆபத்தானவர் என தான் நினைக்கவில்லை என மேக்ரான் கூறினார்.