டாக்டருக்கான தகுதித்தேர்வில் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி!

Thursday, November 9th, 2017

சீனாவில் நடைபெற்ற டாக்டருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டாக்டருக்கான தகுதி தேர்வு சீனாவில் நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும்  டிசின்டுவா பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கினர்.

இந்நிலையில் கடந்த 07 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்கள் அதிக பட்சமாக 360 மதிப்பெண் பெற்று இருந்தனர். ஆனால் ‘ரோபோ’ அவர்களைவிட அதிகமாக 456 மதிப்பெண் பெற்றுள்ளது.

தேர்வு எழுதியவர்களுக்கு இன்டர்நெட் உதவி வழங்கப்பட்டது. ஆனால், ‘ரோபோ’ எந்தவித உதவியுமின்றி தேர்வு எழுதியுள்ளது. இந்த ரோபோக்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து டாக்டர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: