டாக்கா விமான நிலைய அருகே தற்கொலைப்படை தாக்குதல்: பொறுப்பேற்றது ஐ.ஐ.எஸ்!

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நேற்று இரவு 8 மணியளவில் தற்கொலைப்படைதாரி ஒருவர் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, டாக்கா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்காவில் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி!
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம...
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் - சீனாவுக்குச் செல்கின்றார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!
|
|