ஜோன் மெக்கலம் பதவி இராஜினாமா!

சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பிரதானி கைது செய்யப்பட்ட சர்ச்சையின் விளைவாக சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மெக்கலம் பதவி விலகியுள்ளார்.
தமது ஆலோசனைக்கு அமையவே சீனாவிற்கான தூதுவர் பதவி விலகியதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரதானி ஒருவர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில், சீனாவில் வைத்து இரண்டு கனேடிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கருத்து வெளியிட்டிருந்த சீனாவுக்கான கனேடிய தூதுவர் ஜோன் மெக்கலம் சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரதானியொருவரை கைது செய்தமை தவறான செயல் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, அவர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை: வடகொரியாவிற்கு ஐ.நா கடும் கண்டனம்!
சிரிய யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா மற்றும் துருக்கி இணக்கம்!
58 கோடி போலி கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்!
|
|