ஜேர்மன் தாக்குதலின் எதிரொலி…! மூடப்படும் கதவுகள்..!

Thursday, December 22nd, 2016
அகதிகள் விடயத்தில் ஜேர்மன் மெத்தன போக்கை கடைபிடித்துள்ளதாகவும், அதன் காரணமாக பெர்லின் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய முன்னணி கட்சியில் தலைவி மரின் லு பென் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள அகதிகளை கருவியாக பயன்படுத்தும் தீவரவாதிகள் பல தாக்குதல் சம்பவங்களை மேற்கொள்கின்றனர்.

எனவே, ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கான கதவை இறுக மூட வேண்டும் என மரின் லு பென் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேர்மன் தாக்குதலையடுத்து உலக அளவில் பல நகரங்களின் பாதுகாப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில். பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றியுள்ள வீதிகள் யாவும் இன்று சிலமணிநேரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் ஆவண மோசடி தொடர்பில் ஜேர்மனியில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டவர் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கிறிஸ்மஸ் சந்தையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது 12 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: