ஜேர்மன் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல் !

Saturday, July 8th, 2017

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டின் நேற்றைய அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜேர்மன் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டின் இரண்டு நாள் அமர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தனஇந்த நிலையில், ஜேர்மனியின் சில இடங்களில் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்போது இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் குறைந்தது 197 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக ஹம்பேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், குறைந்த 87 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களில் 17 பேர் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts: